தமிழகத்தில் பெரிய ஸ்டார்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது பெரிய பெரிய கட் அவுட்டுகள் வைத்து, அவற்றிற்கு பாலாபிஷேகம் செய்வது அந்தந்த ரசிகர்களின் வழக்கம் என்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம். ஒருசில நடிகர்களின் ரசிகர்கள் பீர் அபிஷேகம் செய்வதுண்டு என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல்முறையாக புது டிரெண்டாக நேற்று முன் தினம் ரிலீஸான அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் கட் அவுட்டுக்கு அவரது ரசிகர்கள் கோலா அபிஷேகம் செய்துள்ளனர். அஜீத்தின் பிரமாண்டமான கட் அவுட் ஒன்றுக்கு ரசிகர் ஒருவர் கோலா அபிஷேகம் செய்யும் புகைப்படம் சமுக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது.
கோலா அபிஷேகம் செய்யும் இந்த புதிய டிரெண்டை பல அஜீத் ரசிகர்கள் வரவேற்றும், ஒருசில நடுநிலையானவர்கள் கண்டித்தும் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

No comments:
Post a Comment